காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடு,மாடு,கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் கால்நடைகளை திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், கடந்து ஆறு நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்த காந்தூர் கிராமத்தில் ஏழு ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன.
இரவில் ஆடு, மாடுகளை திருடும் கும்பலை பிடிக்க மக்கள் கோரிக்கை - cctv
காஞ்சிபுரம்: இரவு நேரங்களில் கால்நடைகளை திருடும் மர்ம கும்பலை விரைவில் பிடிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட கோழிகள் காணாமல் போய் உள்ளது. இந்த திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு லோடு வேன்களில் வரும் நபர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில் பல்லவர் நகரில் ஆடு, மாடுகளை திருட வந்த திருடர்களை அவ்வழியாக வந்த வாலிபர் சந்தேகமடைந்து விசாரித்தபோது, அவரை அடித்து துரத்தி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி அந்த திருடர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.