தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் சேர்க்கைப்பதிவு விண்ணப்பங்களை திடீர் ஆய்வுசெய்த ஆட்சியர் - kancheepuram collector inspects new voters form

காஞ்சிபுரம்: சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் பணியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வீடுவீடாகச் சென்று புதிய வாக்காளர் சேர்க்கைப்பதிவு விண்ணப்பங்களை திடீர் ஆய்வுசெய்தார்.

kancheepuram collector inspects new voters form
kancheepuram collector inspects new voters form

By

Published : Dec 9, 2020, 1:57 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்களில் புதிய வாக்காளர் சேர்க்கைக்காகப் பதிவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. இந்த விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை ஆராயும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையடுத்து, இன்று (டிச. 09) காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெரு பகுதியில் நடைபெற்ற பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு திடீர் ஆய்வுமேற்கொண்டு வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களின் தகுதி, முகவரிகளைச் சரிபார்த்தார்.

ஆய்வின்போது காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி, நகராட்சிப் பொறியாளர் ஆனந்த ஜோதி, தேர்தல் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க... வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details