தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு! - kancheepuram youngster died

காஞ்சி: புத்தாகரம் பகுதியில் இயற்கை விவசாய பண்ணை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

died
died

By

Published : Aug 29, 2020, 5:11 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் பகுதியில் சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர் 40 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வருகிறார்.

இப்பண்ணையில் அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இயற்கை விவசாய பண்ணை
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 28) மாலை பண்ணைக்கு வேலை காரணமாக சென்றபோது அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனை
இந்நிலையில், போதிய பாதுகாப்பு இல்லாமல் மின் வயர்களை எடுத்து சென்றதால் விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததோடு, இறந்த இளைஞர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மின்கம்பம்

இதையும் படிங்க:17 வயது சிறுமியை மணம் முடித்து பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது போக்சோ!

ABOUT THE AUTHOR

...view details