தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் ஜூன் 19ஆம் தேதி வரை ஜமாபந்தி - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 19ஆம் தேதி வரை 12 வட்டங்களில் உள்ள 757 வருவாய் கிராமங்களில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டையில் இன்று முதல் வரும் ஜூன் 19ஆம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைப்பெறும்

By

Published : Jun 7, 2019, 8:27 AM IST

Updated : Jun 7, 2019, 9:36 AM IST

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டத்திற்கு 1428ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் 24 வகையான வருவாய் தீர்வாய கணக்குகளை முடிக்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்ச்சி ஜூன் ஆறாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் சமபந்தி நிகழ்ச்சி

இன்று மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. ஜமாபந்தி நிகழ்ச்சியின் இறுதி நாளில் குடிகள் மாநாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே ஜமாபந்தி நிகழ்வினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் "என்றார்.

Last Updated : Jun 7, 2019, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details