வருகிற அக்டோபர் 11ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழ்நாடு வருகிறார். இங்கு வரும் அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன், இரு தலைவர்களும் பார்வையிடும் அர்ஜுன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை இன்று மேற்பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
'இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட நெடுங்கால நட்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பிரதமர் மோடி சீனாவுக்கு முன்னதாக பயணம் செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.