தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக , உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கரோனாவிற்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளதை அறிந்துகொண்ட பொதுமக்கள், தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட 44 வயதிற்குள் 41 ஆயிரத்து 206 நபர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 42 ஆயிரத்து 422 நபர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட 24 ஆயிரத்து 550 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 1,35,249 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 249 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாகவும், அதில் 18 வயதிற்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 206 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் உள்ள 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இதனையடுத்து நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்ததையடுத்து தற்போது மீண்டும் மாவட்டத்தில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நான்கு அரசு மருத்துவமனைகள், ஐந்து சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.