காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே லாலா தோட்டம் பகுதியில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமாக 9 ஏக்கர் இடமுள்ளது. இதில் சுமார் 1.65 ஏக்கர் இடத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு தகவல் வந்தது.
தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறையினரின் உதவியோடு இந்து சமய அறநிலையத் துறையினரும், வருவாய் துறையினரும் இன்று (ஜன.18) நடவடிக்கை எடுத்தனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி 1.65 ஏக்கர் நிலத்தினை அதிரடியாக மீட்டெடுத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் இன்றைய மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் ஆகும்.