தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலை இருளால் விபத்து: தீப்பந்தம் ஏந்தி மக்கள் நூதன போராட்டம்! - போராட

சென்னை: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்ககோரி கைகளில் தீப்பந்தம் ஏந்தியவாறு இந்திய ஜனநாயக கழகத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Feb 6, 2019, 5:32 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தேவநேரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசு சார்பில் சோடியம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த விளக்குகள் எரியாததால், சாலை விபத்துகள், வழிப்பறி சம்பங்கள் அதிகளவில் நடப்பதாகவும், சோடியம் விளக்குளுக்கு மின் இணைப்பு வழங்கி இரவு நேரத்தில் ஒளியேற்றுமாறு அதிகாரிகளை கண்டித்து இந்திய ஜனநாயக கழகம் (இசுலாமிய அமைப்பு) இன்று அதிகாலை மாமல்லபுரம் இ.சி.ஆர் புறவழிச்சாலையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்டனர்.

சுமார் நூறு இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டத்தில்,
தங்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்திவாறு இ.சி.ஆர். சாலையில் உள்ள இருள்சூழ்ந்த பகுதியில் பேரணியாக சென்ற நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

அப்போது, இரவு நேரங்களில் சோடியம் விளக்குகளை எரிய வைக்ககோரி மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். தீப்பந்தம் ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் காவல் துறை சார்பில் ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details