தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினிக்கு கட்டாயம் உதவி செய்வேன்' - சுப்பிரமணியன் சுவாமி - rajinikanth

காஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்குப் பாதுகாப்பாக இருப்பார் என்றால், அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன் என்று மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி, subramania samy
சுப்பிரமணியன் சுவாமி, subramania samy

By

Published : Mar 6, 2020, 12:01 AM IST

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் 23ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கரமடத்தின் 70ஆவது மடாதிபதி விஜயேந்திரர், பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பரமணிய சுவாமி
இதைத் தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி, ”நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்குப் பாதுகாப்பாக இருப்பார் என்றால், அவருக்கு நான் கட்டாயமாக உதவி செய்வேன்” என்றார். ரஜினி, கமல் இணைவது அதிமுகவுக்கு நிகராக வர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் குழந்தை பிறக்கட்டும், அதன் பிறகு பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details