தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பை கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் - கிராம மக்கள் அதிர்ச்சி - குப்பை கிடங்கில் மனித எலும்புக்கூடுகள்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராம குப்பை கிடங்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த மனித எலும்புக்கூடுகளை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பை கிடங்கில் மனித எலும்புக்கூடுகள்
குப்பை கிடங்கில் மனித எலும்புக்கூடுகள்

By

Published : Jul 31, 2021, 7:41 AM IST

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்கில் கிடந்த மனித எலும்புக் கூடுகள் பொது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராம ஏரிக்கரையோரம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்க வைக்கும் குப்பைக் கிடங்கு செயல்படுகிறது.

இந்நிலையில் குப்பை கிடங்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் கிடந்தன. கிராம தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரிக்க சென்றபோது குப்பை கிடங்கில் கிடந்த மனித எலும்புக் கூட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரம்யாவின் ரம்யமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

உடனடியாக இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் எலும்புக்கூடுகள், மண்டை ஓட்டைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடுகள்

மாந்திரீக வேலைக்கு எலும்புக்கூடுகள் கொண்டுவரப்பட்டதா?, அல்லது பொது மக்களை பயமுறுத்துவதற்காக சமூக விரோதிகள் யாராவது கொண்டுவந்து போட்டார்களா என பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கு அருகே எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details