காஞ்சிபுரம்: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரால், சென்னை மற்றும் புறநகரில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவ மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 3 மணியளவில் 100 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.