தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூந்தமல்லி அருகே சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!

காஞ்சிபுரம்: பூந்தமல்லி அருகே அரசுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 36 ஏக்கர் நிலத்தை அலுவலர்கள் மீட்டனர்.

சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

By

Published : Jun 29, 2021, 7:49 PM IST

பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியில் சுமார் 36 ஏக்கர் 28 சென்ட் நிலத்தை தனியார் நபர்கள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த இடத்துக்கான உரிய ஆவணங்கள் நில உரிமையாளர்கள் எனக் கூறியவர்களிடம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்று (ஜூன்.29) ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இவ்வளவு நாள் இடத்தை ஆக்கிரமித்திருந்தவர்களை வெளியேற்றினர்.

மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட 36 ஏக்கர் 23 சென்ட் நிலத்தில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் கட்டி அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details