தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு - நீட் தேர்வு

நீத் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

By

Published : Sep 12, 2022, 7:58 PM IST

காஞ்சிபுரம்:நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுகிறது என்றும், ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் நிச்சயமாக நீட் பயிற்சி மையங்களை முறையாக அரசு நடத்தி இருக்க வேண்டும் என்றும், அதை அரசு செய்ய தவறி மாணவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், “திமுக அரசின் இரட்டை வேடத்தை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி டில்லி பாபு இல்லத் திருமண விழா காஞ்சிபுரத்தில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று(செப்.12) நடைபெற்றது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி கலந்துக்கொண்டு மணமக்களான ராகுல்-பாரதி தம்பதியினரை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் எம்.பி தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வு என்பது அரசினுடைய மிகமோசமான அறிவிப்பு.

மக்களை நேரடியாக தாக்கக்கூடிய இந்த அறிவிப்பு, குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு சொத்து வரியை ஏற்றிவிட்டு கொஞ்சம் கூட மக்கள் மீது அக்கறை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மின் வரியை தங்களுடைய லாபத்திற்காக ஏற்றுவது என்பது உண்மையிலேயே ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சிறு குழு தொழில்கள், வருகின்ற நாட்களிலே தமிழகத்தினுடைய பொருளாதாரம் வளர்ச்சி என அதைப் பற்றியும் இந்த அரசுக்கு கவலை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.

இதனுடைய தாக்கம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பொருளாதார ரீதியாக சங்கடங்கள் ஏற்படும், எனவே தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து அதையே, நிறைவேற்றாத அரசு மேலும் மக்களுக்கு சங்கடங்களை கொடுக்கக்கூடிய அரசாக இந்த அரசாங்கம் செயல்படுகிறது.

மக்களுடைய சுமைகளை குறைக்க வேண்டும் என்றால் உடனடியாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கவுரவம் பார்க்காமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின்சார உயர்வு அறிவிப்பை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மின்சார உயர்வு வாபஸ் பெறவில்லை என்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடுஅரசு இரட்டை வேடம் போடுகிறது. ஒரு பக்கம் இந்தத் தேர்வை நிறுத்தி விடுவோம் என்று மாணவர்களிடம் பெற்றோரிடமும் தவறான கருத்தை வெளியிடுகிறது.

நீட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

மறுபக்கம் அது சாத்தியம் இல்லை என்று அவர்களுக்கு தெரிகிறது, அப்படி இருந்தால் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இருந்தால் நிச்சயமாக நீட் பயிற்சி மையங்களை முறையாக அரசு நடத்தி இருக்க வேண்டும் அதை செய்யத் தவறிய அரசு மாணவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள்.

மேலும் இரட்டை வேடம், படிப்பிலே தேவை கிடையாது, அவசியம் இல்லாத ஒன்று, அரசு இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், பெற்றோர்கள் அரசினுடைய இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வேண்டும். பரந்தூர் விமான நிலையத்தை பொருத்த வரையில் தமிழ்நாடு அரசு அந்த பகுதி மக்களிடம் ஆசை காட்டி மோசம் செய்ய நினைக்கிறது.

அது எடுபடாது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்களுடைய எண்ணங்களை அரசு பிரதிபலிக்க வேண்டும், அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அதற்கு 100% மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும், அதற்குப் பிறகு அந்தப் பணியை அவர்கள் செய்வது நல்லது.

வளர்ச்சி தேவை அதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது, யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். காங்கிரஸ் கட்சியினுடைய பாத யாத்திரை, காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலே பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு அந்த கட்சிக்கு அந்த பாதயாத்திரை தேவைப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நாட்டுக்கோ ஏதாவது லாபமா என்றால், இல்லை என்பதுதான் எல்லோருடைய கருத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details