தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலருக்கு கரோனா: காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி மூடல்! - கரோனா தொற்று

காஞ்சிபுரம்: காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பயிற்சிப் பள்ளியை மூடி கிருமி நாசினி தெளிக்கும் பணியை நகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டச் செய்திகள்  Kanchipuram district news  கரோனா தொற்று  காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி
பெண் காவலருக்கு கரோனா தொற்று: காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி மூடல்

By

Published : May 8, 2020, 11:26 AM IST

காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அவர்களின், உமிழ்நீர், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானதில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பயிற்சி பெற்ற, பயிற்சியளித்த காவலர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த மருத்துவர்கள் அறிவுரை வழங்கிய நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சியை நகராட்சி அலுவலர்கள் பூட்டி பயிற்சி பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆதரவற்றவர்களுக்கு வாழ கற்றுக்கொடுத்த கரோனா முகாம்!

ABOUT THE AUTHOR

...view details