நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரப்போவதாகக் கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது கட்சி தொடங்கப்போவதாகவும், அதுகுறித்த அறிவிப்பினை இம்மாதம் டிசம்பர் 31 இல் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்கள், இன்று அவரது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் - ரசிகர்கள் கொண்டாட்டம்! - ரசிகர்கள் கொண்டாட்டம்
காஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
birthday
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் ரஜினி ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
இதையும் படிங்க: ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்!