தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்களை அரசியல் கட்சியினர் வழங்குவதைக் கண்காணிக்கத் தேர்தல் பறக்கும் படையை இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் அமைத்துள்ளது.
ஏடிஎம் பணம் நிரப்பச் சென்ற வாகனம் பறிமுதல்! - தேர்தல் பறக்கும் படை
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.
இந்தப் பறக்கும் படையினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள்பட்ட நாவலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர், அதில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர். இந்தப் பணம் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அலுவலர் முத்து மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டது.