காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம் சுமார் 14.66 கோடி செலவில் புதிய விளையாட்டுத் திடல், தடகள பாதை, பார்வையாளர் அரங்கம், விளையாட்டு வீரர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டு அரங்கினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் கட்டட பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி கிழிதான்'...
அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், 12546 ஊராட்சிகளிலும், 561 பேரூராட்சிகளிலும் விளையாட்டுத் திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன் மேலும், இதன் மூலம் மாணவர்கள் சிறந்த உடற் கல்வியைக் கற்று தங்களது பள்ளிக் கல்வியைச் சிறந்த புத்துணர்வு முறையில் செயல்படுத்தி வருகின்றனர் என்று கூறியவர், இந்த விளையாட்டு மைதானம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மைதானத்தில் பெய்யும் மழை நீர் அனைத்தையும் சேமிக்கும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.