காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தன் மனைவியுடன் அளவுக்கு அதிகமான மதுபோதையில் வந்த வினோத் என்ற நோயாளி தனக்கு முதலில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி உள்ளார். மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனை இரவுநேர காவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவலர், குடிபோதையில் வந்த நோயாளியை தட்டிக் கேட்டபோது அவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு அவர் வெளியேறினார். பிறகு சிறிதுநேரம் கழித்து மீண்டும் அந்த நோயாளி சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியில் இருந்த செவிலியர்களையும், மருத்துவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.