தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர்ப் பஞ்சம்: அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! - போராட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திமுக

By

Published : Jun 24, 2019, 2:51 PM IST

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்

இதில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details