காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் இருந்து திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு பூசாரிகள் நல சங்கத்தின் தலைவர் பாதயாத்திரையாக மு.க ஸ்டாலினை சந்திக்க சென்றார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ''தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் அவல நிலையை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தலைவர் மு.க ஸ்டாலின் மட்டும்தான். எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 90 சதவீத வாக்குகளைப் பெற்று திமுகதான் ஆட்சியமைக்கும்'' எனவும் சமயபுரத்து அம்மன் அருள் புரிவதாகவும் தெரிவித்தார்.