தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் - dmk candidate cvmp Ezhilarasan

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் ரயில் பயணிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

By

Published : Apr 1, 2021, 4:38 PM IST

காஞ்சிபுரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் போட்டியிடுகிறார். இவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள புதிய ரயில் நிலையத்தில் இன்று வாக்கு சேகரித்தார்.

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரிசையாக நின்று பயணிகளிடம் திமுக தேர்தல் அறிக்கைகளை எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.

அப்போது, திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கூடுதல் மின்சார ரயிலை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து, ரயிலுக்குள் இருந்த பயணிகளிடமும் அவர் வாக்குகளை சேகரித்தார்.

இதையும் படிங்க:எனது தந்தை செய்ய நினைத்த பணிகளை தொடர வாய்ப்பளியுங்கள்- விஜய் வசந்த்

ABOUT THE AUTHOR

...view details