காஞ்சிபுரம்:மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, மருத்துவர்கள் குறைவாக உள்ள காரணத்தினால், பயிற்சி மருத்துவர்களையும் கரோனா நோய் தொற்று சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, கரோனா நோய் தொற்று பிரிவில் பணிபுரிய பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பணி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் 90 பயிற்சி மருத்துவர்கள், 'பாதுகாப்பு வழிமுறைகள் ஏதுமில்லாமலும், உரிய சலுகைகள் வழங்காமலும், கரோனா நோய் தொற்று சிகிச்சை பிரிவில் பணிப்புரிய மருத்துவமனை நிர்வாகம் தங்களைவற்புறுத்துவதாக கூறி மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.