தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சாமி தரிசனம்!

தைப்பூசத்தை முன்னிட்டு வல்லக்கோட்டை ஸ்ரீ முருகன் கோயிலில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம்செய்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சாமி தரிசனம்
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சாமி தரிசனம்

By

Published : Jan 28, 2021, 10:52 PM IST

Updated : Jan 28, 2021, 11:04 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதிலுமுள்ள முருகன் கோயிலில் இன்று (ஜன. 28) தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை ஸ்ரீ முருகன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.

சாமி தரிசனத்திற்கு வந்த துணை முதலமைச்சரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காவல் துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

காஞ்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் திரளான அதிமுகவினர் அவருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் துணை முதலமைச்சருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் சாமி தரிசனம்செய்தார்.

தரிசனத்திற்குப் பின்னர், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வல்லக்கோட்டை முருகப்பெருமானின் படம் துணை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகி அப்பன்ராஜ்-திவ்யா தம்பதியரின் மூன்று மாத பெண் குழந்தைக்கு ஜெயஸ்ரீ எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் சூட்டினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி, அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணிச் செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்ளிட்ட அதிமுகவின் பங்கேற்றனர்.

Last Updated : Jan 28, 2021, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details