கரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி முகாம்: நகராட்சி ஆணையர் ஆய்வு! - Kanchipuram
காஞ்சிபுரம்: ஆதவரற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமை பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இன்று (ஜூன் 12) ஆய்வு மேற்கொண்டார்.
Corona Vaccination Camp for Persons with Disabilities
இந்நிலையில் காஞ்சிபுரம் காலாண்டர் தெருவில் செயல்பட்டு வரும் ஆதவரற்ற மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் வசித்து வரும் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் இலவச கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
இதனை காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.