காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கடந்த மாதம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது குழந்தைகள் உட்பட 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தனியார் காப்பகத்திற்கு விசிட் - குழந்தைகளுடன் ஆட்சியர் உற்சாகம் - Kanchipuram orphanage
கரோனா தொற்றில் இருந்து மீண்ட தனியார் காப்பக குழந்தைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
Collector Aarthi visits Kaliyampoondi orphanage
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் 43 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பூரண குணமடைந்த குழந்தைகள், ஊழியர்கள் நலமுடன் காப்பகத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். மேலும் குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.