தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நீரின் கொள்ளளவு, பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

By

Published : Oct 20, 2021, 3:22 PM IST

காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனையொட்டி இன்று (அக்.20) முதலமைச்சர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார்.

27.89 கன அடி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போதைய நீர்மட்டம் 20.74 கன அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு, உறுதித் தன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டினை அவர் பார்வையிட்டார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

இதையும் படிங்க: பாரத் நெட் திட்டம் மூலம் 12 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய சேவை!

ABOUT THE AUTHOR

...view details