தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்டு சின்னத்திற்காக சுயேச்சை பெண் வேட்பாளர் செய்த காரியம்! - காஞ்சிபுரம்

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நண்டு சின்னம் கேட்டு பெண் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கடல் நண்டுடன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம்

By

Published : Mar 25, 2019, 10:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், மேற்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நர்மதா நந்தகுமார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு அனைத்து தகுதியும் இருப்பதாகவும், பணம் மட்டுமே இல்லை என்றும், எனவே ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட தனக்கு நண்டு சின்னத்தை வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில், கடந்த, 2016 சட்டமன்ற தேர்தலில் நர்மதா அம்பத்தூர் பகுதியில் சைக்கிளில் வலம் வந்து சுயேச்சையாக போட்டியிட்டு 300 மேற்பட்ட ஓட்டுகள் பெற்றேன். அடுத்த கட்டமாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டு முன் கடல் நண்டுடன் போராட்டம் நடத்திய குற்றத்திற்காக இரண்டு மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனையும் பெற்றேன். ஆகையால் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றும், அனைவருக்கும் மத்தியில் நண்டுடன் போராடி தமிழக மக்களின் மனதில் இடம்பெற்றுள்ளதால், தனக்கு நண்டு சின்னம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details