காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி வளாகத்திலேயே மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்துள்ளனர்.
இதில், வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு வாக்கு மையத்திற்குள் நுழைவது தொடங்கி கிருமி நாசினி வழங்குதல், உடல் வெப்பநிலை கண்டறிதல், வாக்குச்சாவடி அலுவலர் நடைமுறைகள் ஆகியவற்றை நேர்த்தியாக நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.