தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலநிறத்தில் அருள்பாலித்த அத்திவரதர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! - Athivarathar

காஞ்சிபுரம்: இரண்டாம் நாளான இன்று நீலநிறத்தில் காட்சியளித்த ஆதி அத்தி வரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நீலநிறத்தில் அருள்பாலித்த அத்திவரதரை ஆயிரகணக்கான மக்கள் தரிசனம்!

By

Published : Jul 2, 2019, 9:24 PM IST

காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமிகள் திருக்கோவில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற ஆதி அத்தி வரதர் வைபவம் நேற்று தொடங்கியது. இதில் நேற்று மட்டும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நீலநிறத்தில் அருள்பாலித்த அத்திவரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் நீல நிற அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆதி அத்திவரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details