காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் தொடங்கி 40 ஆவது நாளான இன்று, இளம் ரோஜா நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்கள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அத்திவரதர். பக்தர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கடந்த சில நாட்களாக சராசரியாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
ரோஜா நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்! - பக்தர்கள் கூட்டம்
காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின் 40ஆம் நாளான இன்று, இளம் ரோஜா நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்கள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
athi varadhar
இதுவரை அத்தி வரதரை 74 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கடந்த 39 நாட்களில் தரிசனம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் நாளை முதல் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்திரவின்பேரில் 1,200 தூப்புரவு பணியாளர்கள் உடன் கூடுதலாக 500 துப்புரவு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.