காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்குச் சேகரித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வாக்குச்சாவடியை கைப்பற்றும் நோக்கத்துடன் பேசியிருந்தார். இது தொடர்பாக இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ கூறுகையில், தேர்தல் விதிகளை மீறி சர்சைக்குரிய வகையில் ராமதாஸ் பேசியிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என்றும், அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சர்ச்சை பேச்சு: அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு! - தேர்தல்
காஞ்சிபுரம்: தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய திரூப்போரூர் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது குறித்த சா்ச்சைப் பேச்சையடுத்து அன்புமணி மீது வழக்குபதிய சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.