காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குன்னம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வடிவமைக்கப்பட்ட மூன்று வானிலை கண்காணிப்பு கேன் செயற்கைக்கோள் (CANSAT) வெற்றிகரமாக இன்று வானில் ஏவப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று வானில் ஏவப்பட்ட கேன் செயற்கைக்கோளைக் கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தற்போது உலகநாடுகளை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸைக் கண்டு பொதுமக்கள் பீதியடையவேண்டாம் எனவும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.