தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிம்பு திருமணம் எப்போது? - உண்மையை உடைத்த டி.ஆர் - டி ராஜேந்தர்

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில், நடிகர் சிலம்பரசன் திருமணம் நடக்க வேண்டி அவரது தந்தை டி. ராஜேந்தர் நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.

டி. ராஜேந்தர்
டி. ராஜேந்தர்

By

Published : Dec 6, 2022, 10:53 PM IST

காஞ்சிபுரம்: வழக்குகளை தீர்க்கும் தலமாக விளங்கும் பிரசித்திபெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்ற நடிகர் டி.ராஜேந்தர் அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

நவக்கிரக வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்த நடிகர் டி.ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்தார். கோயில் கொடி மரம் பகுதியில் நெய் தீபம் ஏற்றி, தன் மகன் திருமணத்திற்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், கடந்த முறை 'பீப்' பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில், சுமூகமாக தீர்ந்ததாகவும் தெரிவித்தார்.

எனக்கும், எனது மனைவிக்கும் பிடித்த பெண் என்பதை தவிர்த்து சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரரிடமே விட்டுவிட்டதாகவும், கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி நடிகர் டி.ஆர் சாமி தரிசனம்

சிலம்பரசன் திருமணம் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரின் ஆதரவுடன் விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ஸ்டாலின் நாமதேசியா..': அமைச்சர் சமஸ்கிருதத்தில் செய்த அர்ச்சனை

ABOUT THE AUTHOR

...view details