காஞ்சிபுரம்பழைய ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலையில் வசிப்பவர், மோகன். இவர் பூக்கடைச் சத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது ஆம்னி காரை தினம்தோறும் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த ஒரு வார காலமாக ஆம்னி காரை மோகன் இயக்காமல் இருந்துள்ளார்.
நேற்று இரவு நேரத்தில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் மழை பெய்தது. இருப்பினும் இன்று காலையில் ஆம்னி கார் திடீரென சந்தேகத்திற்குரிய முறையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. கார் தீ பற்றி எரிவதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.