தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் 8,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - captured

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 8,000 லிட்டர் எரிசாராயத்தை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8000 லீட்டர் எரிசாராயம் பறிமுதல்

By

Published : Mar 17, 2019, 7:43 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படிதேர்தல் பறக்கும்படை தாசில்தார் சத்தியா தலைமையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலை குருவிமலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதனையடுத்து லாரியில் இருந்த 1000 - லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 - பேரல்களில் எரிசாராயம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி எரிசாராயம் ஏற்றி வந்த லாரியையும், எரிசாராயத்தையும் மாகரல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

லாரியை ஓட்டி வந்த டிரைவர் இடம் நடத்திய விசாரணையில் மதுராந்தகம் அருகே கள்ளபிரான்புறத்தில் செயல்பட்டுவரும் தனியார் மதுபான ஆலைக்கு ஏற்றிவந்ததாக கூறியுள்ளார்.இதுகுறித்து காஞ்சிபுரம் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதை தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் 8000 -லிட்டர் எரிசாராயத்தை தேர்தல் பரக்கும் படையினர் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ABOUT THE AUTHOR

...view details