தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமறைவாக இருந்த 3 ரவுடிகள் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்! - தமிழ் குற்றச்செய்திகள்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே தலைமறைவாக இருந்த 3 ரவுடிகளை கைது செய்த தனிப்படை காவல் துறையினர், அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

3 rowdies arrested for being undercover; 2 kg of cannabis seized
3 rowdies arrested for being undercover; 2 kg of cannabis seized

By

Published : Jan 3, 2021, 9:10 PM IST

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாமல் சங்கரா குடியிருப்பு பகுதியை சேர்ந்த விஜய் (எ) பூச்சி ( 25,) தாமல் கோபுரத்தெருவை சேர்ந்த தமிழரசன் (எ) வெள்ளை (27), உத்திரமேரூர் பருத்தி கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த பாபு (28) ஆகிய 3 ரவுடிகளும் தலைமறைவாகினர்.

இதையடுத்து அவர்களைப் பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா மேர்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மூன்று ரவுடிகளும் உத்திரமேரூர் பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் உத்திரமேரூரில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 ரவுடிகளையும் தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து, கைது செய்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் பாலுசெட்டி காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில், அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் மூவரையும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தங்கை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details