தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல் - latest election news

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 17 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

By

Published : Mar 30, 2021, 6:18 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் மணிமங்கலம் பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக கோழி ஏற்றிவந்த வாகனத்தை ஆய்வு செய்தபொழுது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்கு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 17 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

இதையடுத்து பறிமுதல்செய்யப்பட்ட 17 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான முத்து மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க:’எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி' - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details