கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்துவந்தார்.
கரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அவரது தந்தை ஆறுமுகம் மூன்று மகள்களுக்கும் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
மூவருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் சூழலில், அடிக்கடி நித்யஸ்ரீயால் ஆன்லைன் வகுப்பை தொடரமுடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.