கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விடுமுறையின்றி பணியாற்றும் காவலர்களுக்கு பல்வேறு பணிச்சுமைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு காவலர்கள் ஆளாகின்றனர்.

இவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், யோகா பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
இதையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில், கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குள்பட்ட 200-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு யோகா பயிற்சி இன்று (நவ. 21) காலை அளிக்கப்பட்டது.
சுமார் 40 நிமிடங்கள் இந்தப் பயிற்சி நடந்தது. இதேபோல், உளுந்தூர்பேட்டையிலும் காவலர்களுக்கு யோக பயிற்சி அளிக்கப்பட்டது.