ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த அயல்துரையின் மனைவி கற்பகம், பிரசவத்திற்காக தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், தவறான சிகிச்சையால் சேய் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கற்பகமும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தாய், சேய் இறப்பிற்கு நியாயம் கேட்டும், தொடர்புள்ள மருத்துவர்களைப் பணிநீக்கம் செய்யக்கோரியும், உயிரிழந்த கற்பகத்தின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.