கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - மலர் தம்பதியின் மகன் பாலா (வயது 26). தீவிர விஜய் ரசிகரான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் கணக்கில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருவதாக பதிவுகள் வெளியிட்டு வந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த 11ஆம் தேதி பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைவன் படத்தை பார்க்காமலேயே போகிறேன்” எனக் கூறி நடிகர் விஜய்யின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ”லவ் யூ தலைவா" என்று பதிவிட்டுச் சென்று, தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தால் விஜய் ரசிகர்கள் மனமுடைந்த நிலையில், இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் #RIPBALA எனும் ஹேஷ் டேக் இந்திய அளவில்ட்ரெண்டாகி வருகிறது. மேலும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.