கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூர் கிராமம் கன்னிமார் கோயில் தெருவில் உள்ள அருள் என்பவரது வீட்டில் நேற்றிரவு மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. அதைத்தொடர்ந்து மளமளவென பற்றிய தீ அருகிலுள்ள அருள் என்பவரது வீட்டிற்கும் பரவியது. சுதாரித்த இருவீட்டாரும் வீட்டில் உள்ள எரிவாயு உருளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைக்க முயற்சித்தனர்.
கள்ளக்குறிச்சியில் மின்கசிவு காரணமாக 2 வீடுகள் தீயில் நாசம் - மின்கசிவு காரணமாக இரண்டு வீடுகள் தீயில் நாசம்
கள்ளக்குறிச்சி: தென்கீரனூர் பகுதியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
kallakurichi
அதன்பின் அங்குவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதையும் படிங்க:சாலையோரம் நின்றிருந்த சொகுசு வேனில் திடீர் தீ