கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு போன்ற பகுதிகளில் தீபாவளியையொட்டி பட்டாசுக்கடை நடத்தவுள்ள பட்டாசுக்கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பட்டாசுக்கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ! - diwali
கள்ளக்குறிச்சி: தீபாவளியையொட்டி பட்டாசுக்கடை நடத்தவுள்ள பட்டாசுக்கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தனிநபர் இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். உயர் ரக சத்தம் உடைய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், கள்ளக்குறிச்சி தாசில்தாரர் பிரபாகரன் மற்றும் பட்டாசுக்கடை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.