கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில், மலைக்கிராமங்கள் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கல்வராயன் மலைப் பகுதியில் 7,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 7,500 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.
saarayam
அப்போது பொரசம்பட்டு, தாழ்தேவனூர், கோனாங்காடு, வாழைக்குழி ஆகிய மலைக்கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காகப் போடப்பட்டிருந்த சாராய ஊறல்களை கொட்டி அழித்தனர்.
இந்தச் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடிவருகின்றனர்.