கள்ளக்குறிச்சி அருகேயுள்ள புது உச்சிமேடு மணிமுக்தா ஆற்றில் இரவு நேரங்களில், தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாகவும், கொள்ளையர்கள் சாக்கு மூட்டைகளில் ஏற்றிய மணலை ஓர் இடத்தில் கொட்டி வைத்துக்கொண்டு பிறகு டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆற்றுப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் பகலிலும் கடத்தல் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதுபோல் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தால் ஆற்றிற்கு அருகாமையில் உள்ள விவசாய கிணறுகளில் முற்றிலும் நீர்வளம் பாதிக்கப்படும்.