தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரம் நபர்களுக்கு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கிய திமுக எம்.எல்.ஏ

கள்ளக்குறிச்சி: தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் ஆயிரம் நபர்களுக்கு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

rishivandhiyam job vacancy camp
rishivandhiyam job vacancy camp

By

Published : Oct 24, 2020, 2:06 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட அரியலூரில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 5 ஆயிரம் நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இம்முகாமில் பிஇ, பிடெக், எம்பிஏ, எம்சிஏ, ஐடிஐ டிப்ளமோ, எஸ்.எஸ்.எல்.சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியடைந்த அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்ற இம்முகாமில் ஆயிரம் நபர்களுக்கு ஒரே நாளில் வேலைக்கான பணி நியமன ஆணையை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வழங்கினார். வேலை வாய்ப்பினை பெற்ற படித்த பெண்களும், இளைஞர்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details