சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க அனுமதிக்கக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தைத்தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக்குழு ஆய்வு செய்துள்ளதாகவும், பள்ளியின் நிர்வாக அறக்கட்டளை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பள்ளியை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்