தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவி இறப்பு குறித்து வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை - காவல் துறை எச்சரிக்கை! - மாணவி இறப்பு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு குறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவல் துறை எச்சரிக்கை
காவல் துறை எச்சரிக்கை

By

Published : Jul 21, 2022, 8:08 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக பெரும் கலவரம் வெடித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீதும், யூ-ட்யூப் சேனல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வேறு ஒரு சம்பவத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த புகைப்படத்தை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தார் எனத் தவறாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனையறிந்த காவல் துறையினர் இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலிப்பிரச்னை தொடர்பாக முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்த புகைப்படத்தை தவறாகச்சித்தரித்து பயன்படுத்தி வருவதாகவும், இந்தப் புகைப்படத்திற்கும் கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கிற்கும் தொடர்பு இல்லை எனவும் காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு வாட்ஸ்அப் மூலம் போராட்டம் நடத்த முயன்ற 2 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details