தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கடலில் கலக்கும் தென்பெண்ணை' தடுப்பணை கட்ட அரசு பரிசீலிக்குமா? - plea of Farmers Barrage

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேறுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 18, 2022, 9:34 PM IST

'கடலில் கலக்கும் தென்பெண்ணை' தடுப்பணை கட்ட அரசு பரிசீலிக்குமா?

கள்ளக்குறிச்சி:கர்நாடக மாநிலம், நந்தி கேசவ மலையின் அடிவாரப் பகுதிகளில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, இரண்டு பிரிவுகளாக பிரிந்து வேலூர் பகுதியில் வட பெண்ணை பாலாறாகவும், கிருஷ்ணகிரி பகுதியில் தென்பெண்ணை ஆறாகவும் பாய்ந்தோடுகிறது.

இதில், தென்பெண்ணையாற்று நீரானது திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு வழியாக பயணித்து விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து கடலில் கலக்கிறது.

இவ்வாறு தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரினால் பல்லாயிரக்கணக்கான மக்களின் தாகம் தணிவது மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் தென்பெண்ணையாற்று நீரை திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் இருக்கும் 'சாத்தனூர் அணை'யில் (Sathanur Dam) தேக்கி கோடை காலங்களில் விவசாயப் பயன்பாட்டுக்காக, திறந்துவிடும் நடைமுறை ஆண்டுதோறும் சம்பா பருவங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்த்தும் வருகிறது. அத்தோடு, பருவ மழைக்காலங்களில் கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை ஆகியன நிரம்பியவுடன் உபரிநீர் தென் பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரானது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று வீணாக கடலில் கலந்து பயனற்றுப் போகிறது. இதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை - அரசு கவனம் தேவை

தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை: குறிப்பாக, மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கும், கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?

இதையும் படிங்க: நெல் நடவில் ஓவியம்.. கடலூர் விவசாயி அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details