நிவர் புயல் இன்று (நவ. 26) அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயலின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. அதில் உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று (நவ. 25) நள்ளிரவில் பெய்த கனமழையால் சேந்தநாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கிருந்து இந்த வெள்ளம் தாழ்வான பகுதியான நரியன்ஓடைக்கு வந்தது. இதனால், அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
உளுந்தூர்பேட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதம்!
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக மழைநீரில் மூழ்கின.
மூழ்கிய நெற்பயிர்கள்
இந்தத் தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றி பயிர்களைப் பாதுகாக்க வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.